செய்திகள் மலேசியா
ஜசெகவை நிராகரித்ததால் ஜொகூர் மந்திரி புசார் இனவெறியரோ, இனவாதியோ அல்ல: ஜம்ரி
கோலாலம்பூர்:
ஜசெகவை நிராகரித்ததால் ஜொகூர் மந்திரி புசார் இனவெறியரோ, இனவாதியோ அல்ல.
தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் இதனை கூறினார்.
ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி ஜசெகவுடன் இணைந்து பணியாற்ற மறுத்துள்ளார்.
ஆனால் எப்போதும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அவர் ஒரு இனவெறியரோ, இனவாதியோ அல்ல.
ஜசெக குறித்த ஓன் ஹபிஸின் அறிக்கையை விமர்சிப்பதில் எந்தக் கட்சியும் மிகவும் கடுமையாகவோ அல்லது வரம்பு மீறியோ இருக்கத் தேவையில்லை.
ஏனெனில், அவரது நிலைப்பாடு இன உணர்வுகளிலிருந்து பிறந்ததல்ல, மாறாக அரசியல் கொள்கைகள், கருத்தாய்வுகளில் உள்ள வேறுபாடுகளிலிருந்து பிறந்தது.
இந்தப் பிரச்சினை ஆணவம் சார்ந்ததோ அல்லது மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்ட கட்சிகளுடன் ஈடுபட மறுப்பதோ அல்ல.
ஜொகூரின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலம் முழுவதும், இனம், மதம் அல்லது அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சேவை செய்வதை ஓன் நிரூபித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு முன்பு, கடந்த ஆட்சிக் காலத்தில் ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணி ஆளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அவர் வெளிப்படுத்திய அரசியல் நிலைப்பாட்டை, மாநிலத்தின் அரசியல் சூழல், ஜொகூர் தேசிய முன்னணி போராடிப் பெற்ற மக்கள் ஆணை ஆகியவற்றின் பின்னணியில் பார்க்க வேண்டும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 9, 2026, 2:36 pm
சுங்கை தெக்காலியில் ‘4 மாடி ஃபிளாட்': ரோஹிங்கியா குடியேற்றம் குறித்து பரபரப்பு கேள்விகள்
June 9, 2026, 12:50 pm
