நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடும்பத்தினர் விமானத்திலிருந்து இறங்குமாறு அறிவுறுத்தப்பட்ட சம்பவம்: ஏர் ஆசியா மன்னிப்பு கோரியது

சிப்பாங்:

சமீபத்திய தியாகப் பெருநாள் விடுமுறையின் போது ஒரு குடும்பம் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் ஆசியா நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியது.

மேலும் சிறப்புத் தேவைகள் உள்ள பயணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய, அனைவரையும் உள்ளடக்கிய நிலையான இயக்க நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மே 26 அன்று சிங்கப்பூரிலிருந்து கூச்சிங்கிற்குச் சென்ற ஏகே 1776 விமானத்தில் அந்தக் குடும்பம் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து விமான நிறுவனம் ஒரு விரிவான ஆய்வை முடித்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பாதுகாப்பு, தர அதிகாரி, கேப்டன் சரவணன் சுப்ரமணியம், ஏற்பட்ட சிரமங்களுக்கு நிர்வாகம் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியதாகத் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த பாதுகாப்புத் தேவைகள், இயக்க நடைமுறைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும்,

எந்தவொரு விருந்தினரையும் பயணம் செய்வதிலிருந்து தடுப்பது எங்கள் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset