செய்திகள் மலேசியா
டேஷ்கேம் கேமரா பதிவுகள் தற்போது நீதிமன்றத்தில் மிகவும் நம்பகமான டிஜிட்டல் சாட்சியாகும்: வழக்கறிஞர் பார்த்திபன்
கோலாலம்பூர்:
நீதிமன்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமான டிஜிட்டல் சான்றுகளில் ஒன்றாக டேஷ்கேம் கேமரா பதிவுகள் தற்போது அதிகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.
சாலை விபத்து வழக்குகள், மோதிவிட்டு தப்பிச்செல்லும் சம்பவங்கள், சாலை ஆத்திரம் மற்றும் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் இது பொருந்தும்.
உணர்ச்சிகள், புரிதல்கள் அல்லது மனித நினைவாற்றல் பலவீனங்களால் பாதிக்கப்படாமல், ஒரு சம்பவத்தின் உண்மையான சூழ்நிலைகளை வீடியோ பதிவுகள் நேரடியாகக் காட்டும்போது, தொழில்நுட்ப வளர்ச்சிகள் சான்றுகளின் நிலையை மாற்றியுள்ளன என்று வழக்கறிஞர் எம். பார்த்திபன் கூறினார்.
ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பும், நடக்கும்போதும், நடந்த பிறகும் ஒவ்வொரு முக்கியத் தருணத்தையும் தொடர்ந்து பதிவுசெய்யும் நடமாடும் சிசிடிவி-யாக டாஷ்கேம்களை இப்போது கருதலாம்.
டேஷ்கேம் பதிவுகள் இனி வெறும் துணைப் பொருள் மட்டுமல்ல.
பல சந்தர்ப்பங்களில், அவை சம்பவத்தின் காலவரிசையை மிகவும் துல்லியமாகவும் தெளிவாகவும் மீண்டும் கட்டமைக்க அதிகாரிகளுக்கு உதவும் சான்றுகளாக மாறுகின்றன.
சம்பவம் நடந்த நேரத்தில் அது நேரடியாகப் பதிவு செய்யப்பட்டதால், மறுக்க முடியாத ஒரு சித்திரத்தை இது வழங்குகிறது.
டேஷ்கேம் பதிவுகள் நம்பகத்தன்மை, வழக்கிற்குத் தொடர்பு, எந்த வகையிலும் மாற்றப்படவில்லை ஆகிய தேவைகளைப் பூர்த்தி செய்தால், நீதிமன்றம் அவற்றை முதன்மை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 52(1)-இன் கீழ் வரும் மோதிவிட்டுத் தப்பிச்செல்லும் வழக்குகள், டேஷ்கேம்களைப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் பயனடைகின்றன.
டேஷ்கேம் பதிவுகள் மூலம், வாகனப் பதிவு எண், ஓட்டுநரின் முகம், சம்பவம் நடந்த நேரம், வாகனம் சென்ற திசை ஆகியவற்றை மிக விரைவாக அடையாளம் காண முடியும்.
இதன் மூலம் வழக்குகளும் விரைவாக முடிவுக்கு வரும் வழக்கறிஞர் பார்த்திபன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 9, 2026, 2:36 pm
சுங்கை தெக்காலியில் ‘4 மாடி ஃபிளாட்': ரோஹிங்கியா குடியேற்றம் குறித்து பரபரப்பு கேள்விகள்
June 9, 2026, 12:55 pm
ஜசெகவை நிராகரித்ததால் ஜொகூர் மந்திரி புசார் இனவெறியரோ, இனவாதியோ அல்ல: ஜம்ரி
June 9, 2026, 12:50 pm
