நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் - பெர்சத்து இடையிலான பிளவு; தேன் தீர்ந்து விட்டால், உறவு முடிந்து விடும்: கணபதிராவ்

கிள்ளான்:

தேன் தீர்ந்து விட்டதால் உறவு முடிந்து விடும் என்பதற்கு ஏற்ப  பாஸ் - பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் இதனை கூறினார்.


தனது கூட்டாளியுடனான உறவைத் துண்டிக்கும் பாஸ் கட்சியின் முடிவைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

நலன்கள் ஒத்துப்போகும் வரை மட்டுமே சில அரசியல் கூட்டணிகள் நீடிக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

இதுவரை அடிக்கடி பேசப்பட்டு வரும் உம்மாவின் ஒற்றுமை உண்மையிலேயே கொள்கைகளின் அடிப்படையிலானதா அல்லது ஒரு தற்காலிக அரசியல் வசதிக்கானதா என்று கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.

பாஸ் கட்சி நீண்ட காலமாக உம்மாவின் பெயரில் ஒற்றுமைக்காகப் போராடி வருகிறது.

இருப்பினும், நலன்கள் மாறத் தொடங்கியபோது அரசியல் பிளவுகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டுள்ளன என்பதை வரலாறு காட்டுகிறது.

ஒரு கூட்டணியிலிருந்து மற்றொரு கூட்டணிக்கு, கூட்டாளிகள் எதிரிகளாகவும், எதிரிகள் கூட்டாளிகளாகவும் மாறினர் என்று அவர் கூறினார்.

பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள் சம்பந்தப்பட்ட சமீபத்திய நிகழ்வுகள், எந்தவொரு கட்சியும் அடிக்கடி முன்வைக்கும் கோஷங்கள், அரசியல் சொல்லாடல்களுக்கு அப்பால் மக்கள் பார்க்க வேண்டும் என்பதை நிரூபித்துள்ளன.

கொள்கைகள், பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் உண்மையாகக் கட்டப்பட்ட அரசியல் உறவுகள், சவால்களையும் கருத்து வேறுபாடுகளையும் எதிர்கொண்ட போதிலும் நிலைத்திருக்க வேண்டும்.


மாறாக, அரசியல் சூழல் மாறும்போது தற்போதைய நலன்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உறவுகள் பொதுவாக நிலைத்திருப்பது கடினம்.

அரசியல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு கூட்டணிக்கும் கொள்கைகளே அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை, பாஸ், பெர்சத்து  கட்சிகளுக்கு இடையே நடந்த நிகழ்வு மக்களுக்கு நினைவூட்டியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset