நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணிக்கு டான்ஸ்ரீ மொஹைதின் மீண்டும் தலைமையேற்க வேண்டும்: பெர்சத்து தலைவர்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணியின்  தலைமைப் பதவியை டான்ஸ்ரீ மொஹைதின் யாசினிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வரும் பாஸ் கட்சியின் முடிவுக்கு தனது எதிர்வினையாக, உச்சமன்ற உறுப்பினர் டாக்டர் ஹபிப் பஹார்டின் கூறினார்.

இம் மாற்றம் தேசியக் கூட்டணி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் என அவர் விவரித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய மலாய் இன ஒருங்கிணைப்பு செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நம்பகத்தன்மை அதன் தலைவருக்கு உள்ளது.

தேசியக் கூட்டணிக்கு உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் சொல்லாட்சிகள் தேவையில்லை.

எந்தவொரு கட்சியின் நலன்களையும் விட மேலான கொள்கைகள்  இலக்குகளின் அடிப்படையில், மக்களை ஒன்றிணைத்து, நிலைமையை அமைதிப்படுத்தி, கூட்டணியின் பலத்தை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரு தலைவர் தேசியக் கூட்டணிக்குத் தேவை.

டான்ஸ்ரீ மொஹைதின் வெறும் தேசியக் கூட்டணி நிறுவனர் மட்டுமல்ல. 

பெரும்பாலும் அகந்தைப் போட்டியும் செல்வாக்குக்கான போராட்டங்களும் நிறைந்திருக்கும் அரசியல் சூழலில், அவர் எளிமையான, அனைவரையும் உள்ளடக்கிய, கலந்தாலோசனை அடிப்படையிலான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset