செய்திகள் மலேசியா
குழந்தைகள் 12-ஆவது மாடியிலிருந்து வீசப்பட்டார்களா?: தம்போய் விபரீதத்தில் வெளிநாட்டுத் தாய் கைது
ஜொகூர் பாரு:
தம்போயில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படும் எட்டு வயது சிறுமி உயிரிழந்ததுடன், அவரது 10 வயது சகோதரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சி சம்பவம் தொடர்பில், குழந்தைகளின் தாயைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட், ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலிஸார், சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் தம்போய் பகுதியில் 37 வயதுடைய வெளிநாட்டுப் பெண்ணைக் கைது செய்ததாகத் ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு முன்னர் எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்பதும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனை எதிர்மறையான முடிவை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-இன் கீழ் சந்தேக நபருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அப் ரஹமான் கூறினார்.
சம்பவம் தொடர்பாக பல சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு, 2001ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ், குழந்தை துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, கைவிடுதல் அல்லது ஆபத்தில் ஆழ்த்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
“இந்தச் சம்பவத்தின் உண்மையான காரணமும் பின்னணியும் இன்னும் விசாரணையில் உள்ளன. தாயின் கைது, இந்த துயரச் சம்பவத்தின் மர்மத்தை அவிழ்க்க உதவும் என நம்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, விசாரணை முழுமையாக நடைபெறுவதற்கு பொதுமக்கள் போலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற ஊகங்கள், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, நேற்று காலை 7.59 மணியளவில் எட்டு வயது சிறுமி அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்ப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஒரு நிமிடத்திற்குப் பின்னர் அவரது 10 வயது சகோதரரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த பரபரப்பான சம்பவம், சமூக வலைத்தளமான Threads-இல் பகிர்ந்த பதிவுகளின் மூலம் வைரலாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 9, 2026, 10:13 am
தேசியக் கூட்டணிக்கு டான்ஸ்ரீ மொஹைதின் மீண்டும் தலைமையேற்க வேண்டும்: பெர்சத்து தலைவர்
June 8, 2026, 11:48 pm
பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது
June 8, 2026, 5:00 pm
