நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் குறித்து விவாதிக்க ஜூன் 12ஆம் தேதி சிறப்புக் கூட்டம்: தேர்தல் ஆணையம்

புத்ராஜெயா:

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஜூன் 12 அன்று ஒரே நேரத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் தலைமை தாங்குவார் என்று ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இத்ருஸ் கூறினார்.

16ஆவது நெகிரி செம்பிலான் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்புத் தேதி, வேட்பாளர் நியமன நாள், வாக்குப்பதிவு நாள், பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல், தேர்தலை நடத்துவதற்கான பிற ஏற்பாடுகள் போன்ற முக்கியத் தேதிகள் குறித்து இந்தச் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

ஜூன் 5 அன்று நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், 16ஆவது முறையாக ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுத்தது.

நெகிரி செம்பிலானில் உள்ள மில்லியன் கணக்கான வாக்காளர்களை உள்ளடக்கிய தேர்தல் செயல்முறைக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை இந்தக் கூட்டம் தீர்மானிக்கும் என்பதால், தற்போது அனைவரின் கவனமும் இதன் மீது குவிந்துள்ளது.

அதே நேரத்தில், இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் தயார்நிலை குறித்த ஒரு ஆரம்ப அறிகுறியாகவும் இந்தக் கூட்டத்தின் முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அன்றைய கூட்டத்தில் ஜொகூர் மாநில தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset