நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; ஓன் ஹபிஸ்க்கு மக்கள் மாபெரும் வெற்றியை வழங்க வேண்டும்: ஹிஷாமுடின்

ஜொகூர்பாரு:

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸிக்கு  மக்கள் மாபெரும் வெற்றியை வழங்கப்பட வேண்டும்.

முன்னாள் அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் இதனை வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

ஜொகூர் மக்களின் நலனுக்காக மாநில நிர்வாகம் சீராகவும் திறம்படவும் தொடர்ந்து இயங்குவதை உறுதிசெய்ய, ஓன் ஹபிஸின் தலைமைக்கு வலுவான ஆதரவு அவசியம்.

மந்திரி புசார் தோல் நிறம், இனம், மதம், பின்னணி பேதமின்றி ஜொகூர் மக்களுக்காக தன்னால் இயன்ற சிறந்ததைச் செய்ய முயன்றுள்ளார்.

வலுவான மக்கள் ஆணை இருப்பதால், மந்திரி புசாரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எந்தவொரு பெரிய திட்டமும் மிகவும் சுமுகமாக நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

அதனால்தான் இந்த முறை நடைபெறும் மக்கள் பிரதிநிதித்துவத் தேர்தல்  எங்களுக்கு முக்கியமானது. 

ஏனெனில், மந்திரி புசாரின் தலைமைக்கு ஒரு பெரிய மக்கள் ஆணை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அது அவருக்காகவோ, பதவிக்காகவோ அல்ல, மாறாக மாநிலத்திற்காகவும் ஜொகூர் மக்களுக்காக என்று அவர் இன்று தனது முகநூலில் பகிர்ந்த ஒரு காணொளி மூலம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset