நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பயனடையும் மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தத் திட்டங்கள் சுவிட்சர்லாந்தில் பகிரப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

ஜெனிவா:

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பயனடையும் மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தத் திட்டங்கள் சுவிட்சர்லாந்தில் பகிரப்பட்டது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மடானி அரசாங்கத்தின் பல்வேறு சாதனைகளையும், சமீபத்திய சட்ட சீர்திருத்தங்களையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் மலேசியா உலக அளவில் தனது சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 

இந்த சீர்திருத்தங்கள் நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள அனைத்துலக சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹம்மது அஸ்மான் அஜீஸ் முஹம்மதுவை மலேசிய தூதுக்குழு மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது, ​​இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துரைக்கப்பட்டது.

பகிரப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களில், கடந்த மார்ச் 31ஆம் தேதி  நடைமுறைக்கு வந்த கிக் தொழிலாளர்கள் சட்டம் 2025-ஐ அமல்படுத்துவதும் அடங்கும்.

உலகின் தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ப, 16 லட்சத்திற்கும் அதிகமான கிக் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பையும், மேலும் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான படியாகும்.

வேலை நேரத்திற்கு வெளியேயும் கூட, விபத்து நடந்த நேரம், இடத்தைப் பொருட்படுத்தாமல், மலேசியாவில் 9 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் விரிவான சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசிய அரசாங்கம், நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பை மேலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நீடித்ததாகவும், இன்றைய தொழிலாளர்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு சீர்திருத்தமும் ஊழியர் நலன், முதலாளிகளின் போட்டித்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைக் கருத்தில் கொள்வதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset