நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செத்தியூவில் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர் தொடர்பான விவகாரம் கல்வியமைச்சு விசாரித்து வருகிறது

கோலத் திரெங்கானு:

செத்தியூவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் முறைகேடு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இது குறித்து கல்வியமைச்சு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைத் துறைக்குத் தெரிவிக்குமாறும் திரெங்கானு மாநிலக் கல்வித் துறை  ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த ஆசிரியர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்வி இலாகா தனது கல்வி நிறுவனங்களுக்குள் எந்தவொரு பாலியல் முறைகேட்டையும் பொறுத்துக்கொள்ளாது. 

குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் முறைகேடு தொடர்பான எந்தவொரு வழக்கு குறித்தும் தகவல் தெரிந்த பொதுமக்கள், அதனைத் துறைக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset