செய்திகள் மலேசியா
மேலும் ஒரு மலேசிய ஹஜ் யாத்ரீகர் உயிரிழந்தார்
மெக்கா:
77 வயதான மலேசிய ஹஜ் யாத்ரீகர் ஒருவர், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
கிளந்தான் மச்சாங்கைச் சேர்ந்த அவர், மாலை 5.40 மணிக்கு கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக தாபோங் ஹாஜி அறிக்கையில் அறிவித்துள்ளது.
இறந்தவர் தனது மனைவியுடன் புனித பூமிக்குச் சென்றிருந்தார்.
அவர் கேசி 50 குழுவைச் சேர்ந்த ஒரு யாத்ரீகர் ஆவார். மேலும் அவர் அப்ராஜ் அல்-தய்ஸீர் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
நேற்று அதிகாலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு, ஜனாஸா தொழுகைக்காக அவரது உடல் பெரிய பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மக்காவில் உள்ள அல் ஷராயா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 10:51 pm
கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
May 24, 2026, 12:55 pm
