செய்திகள் மலேசியா
பண்டான், அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிகளின் நிர்வாகத்தை தெங்கு ஷப்ருல் கண்காணிப்பார்: அமிரூடின்
கோலாலம்பூர்:
பண்டான், அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிகளின் நிர்வாகத்தை தெங்கு ஷப்ருல் கண்காணிப்பார்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும் கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை தெரிவித்தார்.
பண்டான், அம்பாங் தொகுதிகளின் தலைமை தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து,
கெஅடிலான் மாநிலத் தலைமை மன்றம் ஒன்று முதல் மூன்று மாதங்களுக்கு அவற்றின் நிர்வாகத்தைத் தற்காலிகமாகப் பொறுப்பேற்கும்.
கட்சியின் பணிகள் தொடர்ந்து சீராக நடைபெறுவதை உறுதி செய்வதையும், சம்பந்தப்பட்ட இரு பகுதிகளிலும் உள்ள சேவை மையங்கள், இயந்திரங்கள் மற்றும் நிர்வாகத்தை மறுசீரமைப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் பாண்டான், அம்பாங் நாடாளுமன்ற மட்டங்களிலான நிர்வாகத்தை பிரதமரின் அரசியல் ஆலோசகர் டத்தோ செரி தெங்கு ஷப்ருல் அப்துல் அஜீஸ் கண்காணிப்பார்.
பிரதமரின் அலுவலகம் இதைக் கண்காணிக்கும்.
மேலும் பாண்டான், பிரதமரின் புதிய அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்றமாக மாறும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 10:51 pm
கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
May 24, 2026, 12:55 pm
தேசிய கால்பந்து வீரரின் சொகுசு வாகனம் ஜேபிஜேவால் பறிமுதல் செய்யப்பட்டது
May 24, 2026, 9:45 am
