செய்திகள் வணிகம்
ஜோகூரில் RM 200 மில்லியன் முதலீடு செய்யும் தைவான் நிறுவனம்: 500 பேருக்கு வேலை வாய்ப்பு
ஜோகூர்:
தைவானைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் மலேசியாவில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதன்வழி அந்நிறுவனம் 200 மில்லியன் ரிங்கிட் தொகையை மலேசியாவில் முதலீடு செய்கிறது.
ஜோகூர் மாநிலத்தில் அமைய உள்ள புதிய தொழிற்சாலையானது, 2023ஆம் ஆண்டில் இருந்து இயங்கத் தொடங்கும் என Wiwynn Corporation என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தைவானில் இயங்கி வரும் இந்நிறுவனம் உள் கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் சேவையை அளித்து வருகிறது.
சுமார் 4,806 ஹெக்டேர் நிலப்பரப்பில், ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை இந்நிறுவனம் ஜோகூரில் அமைக்கும்.
இதன் மூலம் தைவானுக்கு வெளியே Wiwynn Corporation நிறுவனம் முதன்முறையாக தாமே ஒரு தொழிற்சாலையை நிர்மாணித்திருக்கும் என்றும், அதில் 2023 ஆண்டு முதல் உற்பத்திப் பணிகள் தொடங்கும் என்றும் அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ராபின் வேங் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் அமையும் ஆலையானது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாமல், மிக விரைவில் ஆசிய பசிஃபிக் வட்டாரத்துக்கான Wiwynn நிறுவனத்தின் சேவை மையமாக நிலைநிறுத்தப்படும் என்றும் ராபின் வேங் கூறினார்.
இந்நிலையில், இந்தப் புதிய ஆலையின் மூலம் ஜோகூர்வாசிகளுக்கு என ஐநூறுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூலாய் மாநகர சபைத் தலைவர் நடாஸா ஹாரிஸ் (Natazha Hariss) தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
March 5, 2024, 5:17 pm
பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இந்தியா 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி
March 4, 2024, 11:29 am