நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியாவில் இன்டெல் தொழிற்சாலை: 9,000 வேலை வாய்ப்புகள் உருவாகும்

கோலாலம்பூர்:

பிரபல இன்டெல் நிறுவனம் மலேசியாவில் முப்பது பில்லியன் ரிங்கிட் செலவில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இதன் மூலம் சுமார்  9 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Pat Gelsinger தெரிவித்துள்ளார்.

உலகளவில் semiconductors-க்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, அதன் உற்பத்தியை அதிகரிக்க இந்தப் புதிய தொழிற்சாலை அமைக்கப்படுவதாக இன்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த தொழிற்சாலை 2024ஆம் ஆண்டு முதல் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வழி நான்காயிரம் பேருக்கு இந்நிறுவனத்தில் நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், ஐந்தாயிரம் பேருக்கு கட்டுமானம் தொடர்பான பணிகள் கிடைக்கும் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

semiconductors பற்றாக்குறை காரணமாக உலகளவில் கார் உற்பத்தியும், கைபேசி உற்பத்தியும் பாதிக்கப்பட்டன.

உலகளவில் பத்தில் ஒரு பங்கு semiconductors மலேசியாவில் உற்பத்தியாகிறது. அவற்றின் மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு semiconductors பற்றாக்குறை நீடிக்கும் என மலேசியா எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset