நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலைக் குளிரில் காதலியை தனியாக விட்டுச் சென்ற ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வியன்னா:

ஆஸ்திரியாவின் உயர மலைச் சிகரமான கிராஸ்க்லாக்னரின்(Grossglockner) மலையை ஏறும் போது தனது காதலியை குளிரிலேயே தனியாக விட்டுச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். அந்தச் சம்பவத்தில், 33 வயதான பெண் கடும் குளிரால் உயிரிழந்தார்.

அதிகாலை நேரத்தில் உடல் தளர்ச்சியினாலும், கடும் குளிர்ச்சியினாலும்  பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை சுமார் 50 மீட்டர் தூரத்தில் விட்டுவிட்டு அவர் தனியாக இறங்கியதாக அரசு தரப்பு கூறுகிறது. மீட்புப் படையினர் மறுநாள் காலை சென்றடைந்தபோது, அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

இந்த மலை ஏற்றத்தை திட்டமிட்டு, அனுபவமற்ற தனது காதலியை கடினமான மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்று, அவசர பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்லாமல் அலட்சியத்துடன் செயல்பட்டதாக அவர் மீது சாட்டப்பட்டுள்ளது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் தாய் இந்தச் சம்பவத்தை துரதிர்ஷ்டவசமான விபத்தாகவே பார்க்கிறார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset