நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரமலானை முன்னிட்டு காசாவுக்குக் கூடுதல் உதவிகளை அனுப்பிய எகிப்து

கஹிரா: 

புனிதமான ரமலான் மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, எகிப்து காசாவின் தீபகற்பத்திற்குக் கூடுதல் உதவிகளை அனுப்பியுள்ளதோடு மருத்துவ சிகிச்சைக்காக ரஃபா எல்லை வழியையும் எளிதாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எகிப்து செம்மஞ்சள் பிறை சங்கம் (ERC) 1,97,000-க்கும் மேற்பட்ட உணவு கூடைத் தொகுப்புகள், 235 டன் மாவு, 390 டன் மருந்துகள், அவசர உதவி பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், குளிர்கால தேவைகளுக்கானப் போர்வைகள், உடைகள் ஆகியவையைக் காசா மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 இந்த உதவி பேரணி ரமலான் மாதம் முழுவதும் ஒரு மில்லியன் பாலஸ்தீன மக்களுக்கு இப்தார் உணவு வழங்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாகும் என ERC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எகிப்து பகுதியிலுள்ள ரஃபா எல்லை கடத்தல் நிலையம் வழியாக, காசாவுக்கு திரும்பும் மேலும் ஒரு குழு பாலஸ்தீனர்களும் கடுமையாக காயமடைந்த நோயாளிகளும் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன் பகுதியிலுள்ள எல்லை 2024 மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் மீண்டும் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. இது இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாகும்.

எல்லை மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, எகிப்து கடுமையாகக் காயமடைந்த, நோயுற்ற பாலஸ்தீனர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏற்றுக் கொண்டு, குணமடைந்த காசா குடிமக்களின் வீடு திரும்பும் பணிகளையும் எளிதாக்கி வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset