நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் RM 69,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: நால்வர் கைது

ஜோகூர் பாரு:

சிங்கப்பூர்வ்ஜோகூர் எல்லையில் 62,000 ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓர் உள்ளூர் ஆடவர் அவரின் இந்தோனேசியக் காதலி, 2 பங்களாதேஷ் ஆடவர்கள் என 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெ ஸ்டார் (The Star) நாளேடு தெரிவித்தது.

அவர்களிடமிருந்து 254 கிராம் கெட்டமைன் (ketamine), 1,015 கிராம் எக்ஸ்டசி (Ecstasy) தூள், 45 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 7.6 கிராம் கஞ்சா (cannabis) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இரு பங்களாதேஷ் ஆடவர்களும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர்ப் பரிசோதனையில் தெரியவந்தது.

அவர்கள் விசாரணைக்காக 7 நாள்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 12 பிரம்படிகளுடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.

​​​​​​தாரம்: The Star

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset