நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் ஆடியோ புக்கிட் அமானில் ஒப்படைப்பு

கோலாலம்பூர்:

கடந்த  நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆடியோ இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் மூன்று இந்திய இளைஞர்களின் குடும்பத்தினர் ஆடியோ பதிவை மேலதிக விசாரணைக்காக நேற்று புக்கிட் அமான் தலைமை போலீஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க வந்தனர்.

அவர்கள் வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன், லத்தீஃபா கோயா, என். சுரேந்திரன், அருண் துரைசாமி, பொதுமக்கள் சிலருடன் வந்திருந்தனர்.

இந்த சம்பவம் முதலில் பாராங் கத்தியால் போலிசாரை தாக்க முயன்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை நோக்கி போலீசார்  பாதுகாப்பிற்காக மேற்கொண்ட நடவடிக்கை என மலாக்கா போலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் மனைவி பதிவு செய்ததாகக் கூறப்படும் கடைசி தருணங்களின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ வெளிவந்த பின்னர் இப்போது இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சவப் பரிசோதனையில், இரத்த நாளத்தில் இன்னும் ஒரு குண்டு இருக்கிற ஒருவரின் உடலில், அவர் மிக அருகில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆடியோ இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது என்று வழக்கறிஞர் என்று ராஜேஷ்  தெரிவித்தார்.

சுயேட்சை விசாரணை கமிஷனை நியமித்தது இந்த புகார் விசாரிக்கப்பட வேண்டும்.

மூன்று இந்திய இளைஞர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே பாராங் கத்தியால் தாக்க வந்ததால் சுட்டோம் என்று போலீசார் சொல்வதில் உண்மை இல்லை என்று அருண் துரைசாமி தெரிவித்தார்.

மூவரையும் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் மின்னல் வேகத்தில் நடந்துள்ளது.

ஆகிவே இந்த சமயத்தில் போலீசார் சொல்வதை நம்ப முடியவில்லை.

சம்பவம் நடந்த போது பதவு செயாயப்பட்ட ஆடியோ ஆதாரமாக உள்ளது.

மூன்று இந்திய இளைஞர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset