நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்தது: விகே மூர்த்தி

பத்துமலை:

செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்தது.

பத்துமலை இந்தியர் நற்பணி மன்றத்தின் தலைவர் விகே மூர்த்தி இதனை கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வுடன் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இம் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு துறையில் அனுபவம் பெற்ற ஷாலினி சுப்பிரமணியம் இப் பயிற்சியை வழிநடத்தினார்.

பத்துமலை தமிழ்ப்பள்ளியின் 4,5,6 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 மாணவர்கள் இப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்திருக்கும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக விகே மூர்த்தி கூறினார்.

பத்துமலை இந்தியர் நற்பணி மன்றத்தின் முதல் பயிற்சி பட்டறை பத்துமலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

இப்பட்டறை சிறப்பாக நடைபெறுவதற்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா முழு ஆதரவு தந்தார்.

இவ்வேளையில் அவருக்கும் மற்ற நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இப்பயிற்சி பட்டறையை அடுத்து பேரா, சிலாங்கூரின் இதர பள்ளிக்களில் நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று மன்றத்தின் செயலாளர் நந்தகுமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset