நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ ரமணின் அர்ப்பணிப்பு, செயல்திறன் ஆகியவை அவர் அமைச்சரவையில் இணைவதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது

கோலாலம்பூர்:

அர்ப்பணிப்பு, செயல்திறன் ஆகியவை டத்தோஸ்ரீ ரமணன் அமைச்சரவையில் இணைவதற்கான சாத்திய கூறுகளாக உள்ளது.

நாட்டின் கவனம் இப்போது சபாவில் நடைபெறும் 17ஆவது மாநிலத் தேர்தல்  மீது குவிந்துள்ள போதிலும், அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளன.

இரண்டு செனட்டர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில், அமைச்சரவை மறுசீரமைப்பு பொது விவாதத்தமாகி உள்ளது.

அவர்கள் வர்த்தகம், முதலீடு, தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் தெங்கு அப்துல், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் ஆவர்.

மேலும் தொழில்முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இவோன் பெனடிக்; பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மூன்று அமைச்சர் பதவிகளும் காலியாக இருந்தன.

எனவே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வதையோ அல்லது தற்போது காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை நிரப்புவதற்கு மாற்றீட்டைக் கண்டுபிடிப்பதையோ தவிர வேறு வழியில்லை.

இந்நிலையில் இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை, பிரதிநிதிகளின் பங்கேற்பு என்பது குறியீட்டு ரீதியாக மட்டுமல்ல.

நிரூபிக்கப்பட்ட திறன்கள், பணி செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

அப்படி இதுவரை, குறிப்பிடப்பட வேண்டிய நபர்களில், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சரும் கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் உள்ளார்.

கடந்த 2022 டிசம்பரில் அமைச்சரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதிலிருந்து, அவர் ஒரு மிதமான தலைவராக அறியப்படுவதைத் தவிர, நிலையான அர்ப்பணிப்பு, செயல்திறனைக் காட்டியுள்ளார்.

குறிப்பாக சமூகத்தைச் சந்திப்பதுடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

பணி, உறுதியான முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட டத்தோஸ்ரீ ரமணனின் அணுகுமுறை, மித்ரா நிர்வகிப்பதில் அவர் வகித்த பங்கின் மூலம் தனித்து நிற்கிறது.

அவரது மேற்பார்வையின் கீழ், இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த மொத்தம் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 34 முயற்சிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.

மேலு. 2026 பட்ஜெட் விவாதத்தின் இறுதி அமர்வின் போது, ​​

மித்ரா திட்டம் கல்வி, பயிற்சி, தொழில்முனைவு மற்றும் தொழில், ஆன்மீகம், கலாச்சாரம், சமூக நல்வாழ்வு ஆகிய நான்கு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது என்று அவர் விளக்கினார்.

இந்நிலையில் 2018 முதல் 2020 வரை துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தின் சூழலில், மனிதவள அமைச்சராக எம் குலசேகரனையும்  நீர், நிலம், இயற்கை வளங்கள் அமைச்சராக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரையும் தகவல் தொடர்பு பல்லூடக அமைச்சராக கோபிந்த் சிங் தியோவையும் கொண்டிருந்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில், வி. சிவகுமார் ஒரு காலத்தில் மனிதவள அமைச்சராக முழு அமைச்சர் பதவியை வகித்தார்.

பின்னர் கோபிந்த் சிங் தியோ இலக்கவியல் அமைச்சராக  நியமிக்கப்பட்டார்.
எனவே தற்போது டத்தோஸ்ரீ ரமணன் அமைச்சரவையில் ஒரு பெரிய இலாகாவிற்கு பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்தக் கருத்து கெஅடிலான் உதவித் தலைவராக அவரது பங்கிற்கும் இணைக்கப்பட்டுள்ளது.

அவர் கொள்கை மட்டத்தில் இந்திய சமூகத்தின் குரலை மிகவும் திறம்பட கொண்டு வர முடியும் என்று கருதப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset