நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரின் புதிய மேயராக ஃபாட்லுன் மாக் தேர்வு

கோலாலம்பூர்:

கோலாலம்பூரின் புதிய மேயராக டத்தோ ஃபாட்லுன் மக் உஜுத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை  அந்தப் பொறுப்பை ஏற்பார்.

டத்தோஸ்ரீ மைமுனா முஹம்மத் ஷெரீப்பின் பதவிக்காலம் ஒரு வருடம் முன்பு குறைக்கப்பட்டது.

58 வயதான ஃபாட்லுனின் நியமனம், ஃபெடரல் கேபிடல் சிட்டி சட்டம் 1960 இன் துணைப்பிரிவு 4 (2), இன் படி, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

கோலாலம்பூர் மேயராக மைமுனா இன்று தனது பணியை முடித்துக் கொள்கிறார்.

மேலும் திங்கட்கிழமை பெட்ரோனாஸ் சொத்து ஆலோசகராக தனது கடமையை அவர் தொடங்குகிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset