நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் அமைதியான தீர்வைக் காண உறுதியாக உறுதி கொண்டுள்ளன: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் அமைதியான தீர்வைக் காண உறுதியாக உறுதி கொண்டுள்ளன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கம்போடிய பிரதமர் ஹுன் மானெட்டும் தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுலும் நேர்மறையான கருத்துக்களை வழங்கினர்.
மேலும் அமைதியான தீர்வைக் கண்டறிவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இதன் மூலம் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களைப் பின்பற்றப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து அமைதி முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க ஹுன், அனுதினுடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் கூறினார்.

கடந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் போர்நிறுத்தத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்ற மலேசியாவின் நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset