நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கணவர் தன்னை அடிப்பார் என்ற பயத்தில் காரிலிருந்து குதித்த பெண்

சுங்கைப்பட்டாணி:

கணவர் தன்னை அடிப்பார் என்ற பயத்தில் காரிலிருந்து பெண் குதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு பெண்.

கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் இதனை கூறினார்.

இங்குள்ள ஜாலான் லென்கோங்கனில் தனது கணவரின் கார் சென்று கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்து ஒரு பெண் குதித்து துணிச்சலான நடவடிக்கையை எடுத்தார்.

தனது கணவரால் அடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அவர் இவ்வாறு நடந்து கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் தனது சொந்தப் பாதுகாப்புக்காக அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை நடந்ததாகவும், அதனால் அந்தப் பெண் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

அதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் மாலை 6 மணியளவில் சுங்கை லாலாங்கில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்தபோது தனது கணவரால் காரில் இழுத்துச் செல்லப்பட்டதாகக் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset