நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸுக்குள் நுழையும் வாகனங்களுக்கு சட்டப்பூர்வமாக கட்டணம் வசூலிக்கப்படும்: கெந்திங் மலேசியா

கோலாலம்பூர்:

ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸுக்குள் நுழையும் வாகனங்களுக்கு சட்டப்பூர்வமாக கட்டணம் வசூலிக்கப்படும்.

கெந்திங் மலேசியா நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

இந்த தனியார் சாலைக்கான கட்டணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன், 
இந்த விஷயம் குறித்த கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்படும்.

24 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை, அதன் சரிவுகளின் பராமரிப்பு செலவுகள் 1960களில் இருந்து நிறுவனத்தால் முழுமையாக ஏற்கப்பட்டு வருகிறது.

இதனால் தனியார் சாலையைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் அவசியம் என்று கெந்திங் மலேசியா வலியுறுத்துகிறது.

மலைப்பாங்கான நிலப்பரப்பில்  தனியாரால் கட்டப்பட்ட கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலை, ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் கெந்திங், கெந்திங்  மலேசியாவிற்கு அப்பால் உள்ள மலை இடங்களுக்கு பாதுகாப்பான அணுகலை வழங்குகிறது.

ஜாலான் கெந்திங் ஹைலண்ட்ஸை அடிக்கடி பயன்படுத்துவதால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து பராமரிப்பு தேவைப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset