நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் விளக்கத்திற்கு நன்றி; ஆனால் மேல்முறையீடு செய்வது உறுதி: இவோன் பெனடிக்

கோலாலம்பூர்:

சபாவின் 40 சதவீத வருவாய் உரிமைகள் தொடர்பான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விளக்கத்தைப் பாராட்டுகிறேன்.

ஆனால் மேல்முறையீடு செய்வது உறுதி என்று முன்னாள் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் இவோன் பெனடிக் கூறினார்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் சமீபத்திய உயர் நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு இன்னும் மேல்முறையீடு செய்து வருகிறது.

தீர்ப்பின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டையும் நான் கவனத்தில் கொள்கிறேன். 

ஆனால் முறையீடு என்பது ஒரு மேல்முறையீடுதான் என்று உப்கோ தலைவருமான இவோன் பெனடிக் கூறினார்.

மாநிலத்தின் 40 சதவீத வருவாய்ப் பங்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எவோன், 

அமைச்சரவையில் மூன்று ஆண்டுகள் முழுவதும் இந்தப் பிரச்சினை குறித்து தான் குரல் கொடுத்து வந்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset