நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தல்: தேமு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் ரஹ்மான் டஹ்லான் விலகல்

கோலாலம்பூர்:

சபா தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு தேசிய முன்னணி டெம்பாசுக் வேட்பாளரிடமிருந்து ரஹ்மான் டஹ்லான் விலகினார்.

சபா அம்னோ துணைத் தலைவரான அவர் டெம்பாசுக் மாநில சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளராக வாபஸ் பெற்றார்.

அவரது விலகலை சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ பூங் மொக்தார் ராடின் உறுதி செய்தார்.

அப்துல் ரஹ்மான் விலகுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், 17ஆவது சபா மாநிலத் தேர்தல்  டெம்பாசுக் மாநிலத் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அப்துல் ரஹ்மான் இந்த நடவடிக்கையை எடுத்ததற்கான தெளிவான காரணம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset