நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க 30 இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்:

இந்தியாவில் புகழ்பெற்ற டாட்டா கொல்சால்டன்ட் நிறுவனத்தின் ஆதரவோடு இணைய பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்க 30 இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எஸ்ஐசிசி எனப்படும் நிலையான, உள்ளடக்கிய ஆலோசனைக் குழு தலைவர் சார்லஸ் சந்தியாகோ இதனை தெரிவித்தார்.

முதல் கட்ட பயிற்சியில் 30 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

அதன் பின்னர் மக்களின் ஆதரவை வைத்து அடுத்த கட்ட பயிற்சிகள் தொடரும் என்று அவர் சொன்னார்.

இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சி திட்டத்தின் கட்டணம்  6,000 வெள்ளியாகும்.

ஆனால் ஆயிரம் வெள்ளி முன் பணமாக செலுத்த வேண்டும். பயிற்சி முடித்து பின்னர் இந்த பணம் திருப்பி தரப்படும்.

பிரதமர் துறை அமைச்சு ஆதரவோடு நடைபெறும் இந்த பயிற்சி இந்திய சமுதாயத்திற்கு பெரும் நன்மையை அளிக்கும்.

டாட்டா கொல்சாண்டன்ட் நிறுவனம், கிளானா பிசினஸ் சென்டர் எஎம்இ பயிற்சி நிறுவனம் இந்த இரண்டு வார கால பயிற்சியை  நடத்துகிறது.

வரும் நவம்பர் 17ஆம் தேதி இந்த பயிற்சி பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என்று அவர் சொன்னார்.

உலகம் இன்று மின்னல் வேகத்தில் செயற்கை நுண்ணறிவு, இணையத்தில் வளர்ந்து வருகிறது.

அந்த வகையில் இணைய பாதுகாப்பு துறையில் இந்தியர்கள் பின் தங்கி விடாமல் இருக்க இந்த பயிற்சி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிளானா பிசினஸ் சென்டர் எஎம்இ பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அன்புமணி கந்தசாமி, பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், டாட்டா கொல்சாண்டன்ட் நிறுவனத்தின் பயிற்றுநர் சண்டிப், பிரதமர் துறையைச் சேர்ந்த பூபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset