நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை  அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சிறு, குறு, நடுத்தர வணிக தொழில்முனைவோருக்கான உதவி குறித்து இன்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தை கப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முஹம்மது எழுப்பினார்.

குறிப்பாக பழ ஊறுகாய் தொழில்முனைவோருக்கு ஹலால் சான்றிதழ்களைப் பெறுவதற்கும் சந்தையை விரிவுபடுத்துவதற்கும் உதவி உட்பட அதன் போட்டித்தன்மையை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றி அறிய விரும்பினார்.

இவோன் பெனடிக் தொழில்முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இக்கேள்விக்கு பதிலளித்தார்.
மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவலுக்காக, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு எப்போதும் சிறு, குறு,  நடுத்தர நிறுவனங்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்த உறுதி கொண்டுள்ளது, 

இதில் பழ ஊறுகாய் வணிகத்தை நடத்தும் தொழில்முனைவோரும் அடங்குவர்.

பூமிபுத்ரா நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக எஸ்எம்இ கோர்ப்பின் கீழ் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பூமிபுத்ரா வணிகங்களின் உற்பத்தித்திறன், ஹலால் சான்றிதழை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதே நேரத்தில் விளம்பர உதவிகளையும் வழங்குகிறது.

அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, பழ ஊறுகாய் வணிகத்தை நடத்தும் நிறுவனக்களுக்கு இயந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்காக 500,000 ரிங்கிட் மதிப்புள்ள மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மக்களவையில் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset