நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்ளுக்கான தொடர் கெடுபிடிகள்; உணவகத் துறையின் அழிவுக்கு வித்திடலாம்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர்:

அந்நிய தொழிலாளர்ளுக்கான தொடர் கெடுபிடிகள் உணவகத் துறையின் அழிவுக்கு வித்திடலாம்.

மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.

நாட்டில் உணவகம் துறை மிகப் பெரிய தொழில் துறையாக உள்ளது. நாட்டின் வருவாய்க்கு மிகப் பெரிய பங்களிப்பை தருகிறது. அதே வேளையில் இத்தொழில் துறைக்கு தான் அதிகமான அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால் அத்தொழிலாளர்கள் கிடைப்பது மிகப் பெரிய இழுப்பறியாகவே இருந்து வருகிறது.

ஈராண்டுகளுக்கு முன் இத்தொழில்  துறைக்கு அந்நிய தொழிலாளர்கள் வழங்கப்பட்டது.

அதே வேளையில் தற்போது கந்தியான் என்று மாற்று தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கந்தியான் திட்டம் வாயிலாக அந்நிய தொழிலாளர்கள் கிடைப்பது எளிதான விஷயம் அல்ல.
ஆயிரத்தெண்டு விதிமுறைகள் உள்ளது. அதை எல்லாம் மீறி அந்நிய தொழிலாளர்கள் பெறுவது எளிது அல்ல.

இப்படி பல கெடுப்பிடிகளால் ஏற்படும் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலை நீடித்தால் உணவகத் துறைக்கு அழிவுக்கு வித்திடலாம்.

நாட்டின் வருமானத்திற்கு மிகப் பெரிய பங்கை வகிக்கும் உணவகத் துறையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.

அதை விடுத்து உணவகத் துறை அழிவை பார்க்கக் கூடாது. ஆக உணவகத் துறையை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்விகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் பிரதமருக்கு மைக்கியின் சார்பில் மனு அனுப்பப்பப்டும்.

உணவகத் துறைக்கு புதிய அந்நிய தொழிலாளர்கள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டப்படும்.

மைக்கி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி முகமட் மோசின், பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset