நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபாவின் 3 முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்: மொஹைதின்

கோத்தா கினபாலு:

தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா மாநிலத்தின் 3 முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

இந்த மாத இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சிக்கு ஆணை வழங்கப்பட்டால், தண்ணீர், மின்சாரம், சாலைகள் ஆகிய மூன்று பிரச்சனைகளும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படும்.

சபா மக்களை மீண்டும் மீண்டும் பாதிக்கும் பிரச்சினைகள் தெளிவான, திட்டமிடப்பட்ட நடவடிக்கை இல்லாமல் தொடர அனுமதிக்க முடியாது.

சபாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் தேசியக் கூட்டணி உறுதிப்பாட்டையும் அவர் கூறினார்.

தேசியக் கூட்டணி வெறும் பேசுவதை மட்டும் விரும்பவில்லை.

மாறாக நிறைவேற்றப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ வாக்குறுதியாக கருப்பு வெள்ளை ஆவணத்தின் வடிவத்தில் உறுதிமொழியைச் செய்கிறது என்று அவர் கூறினார்.

சபா மாநிலத் தேர்தலுக்கான 40 தேசியக் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்த அவர் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset