நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவிற்கான 40 சதவீத வருவாய் பிரச்சினை: மேல்முறையீடு இல்லை; பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்குகின்றன: ஏஜிசி

புத்ராஜெயா:

சபாவிலிருந்து பெறப்பட்ட வருவாயில் 40 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு மானியத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது.

இன்று மாலை எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, சபா அரசாங்கத்துடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை செயல்முறையைத் தொடங்கும் என்று சட்டத்துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி கோத்த கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி விவாதிக்க இன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கை விளக்கியுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள வருவாயில் 40 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு மானியங்களின் கொள்கையை மத்திய அரசு மதிக்கிறது என்று சட்டத் துறை தலைவர் அலுவலகம் தெரிவிக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset