நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நில அமிழ்வில் சேதமடைந்த ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் திறக்கப்பட்டது

கோலாலம்பூர்:

நில அமிழ்வால் சேதமடைந்த ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர் மன்றம் இதனை கூறியது.

நேற்று கால சாலையின் ஒரு பகுதி நில அமிழ்வால் சேதமடைந்தது.

சேதமடைந்த பகுதியின் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பழுது பார்க்கும் பணிகள் நேற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

மேலும் அந்த இடம், சுற்றியுள்ள பகுதிகளில் உன்னிப்பாகக் கண்காணித்து மேலும் ஆய்வுகள்  மேற்கொள்ளப்படும்.

மேலும் பொது பாதுகாப்பு ஒரு முன்னுரிமையாகவே உள்ளது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset