நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்க போலிசார் முயற்சித்து வருகின்றனர்: சைபுடின்

கோலாலம்பூர்:

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்க போலிசார் முயற்சித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிதுவான் அப்துல்லா தலைமறைவாக உள்ளார்.

அவரை கண்டுபிடிக்க போலிசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த விஷயம் குறித்து இன்னும் விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை

ஆனால் ஒரு அறிக்கையைத் தயாரித்து பொதுமக்களின் கவலைகளுக்கு பதிலளிக்குமாறு போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இது மரபு சார்ந்த பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இந்த விஷயத்தில் மக்களை எதிர்கொள்ள அறிக்கைகளை தயாரிக்குமாறு நான் போலிசாரிடம் கேட்பேன் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset