நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் தேர்தல்: இன்று வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்தது

கூச்சிங்:

சரவாக் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து அம்மாநில தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

முன்னதாக காலை ஒன்பது மணி முதல் 10 மணிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

12ஆவது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள சரவாக் மாநிலத்தில் மொத்தம் 1,252,014 பதிவு செய்த வாக்காளர்கள் உள்ளன. எதிர்வரும் 18ஆம் தேதி இவர்கள் தங்கள் வாக்கைச் செலுத்த உள்ளனர்.

சரவாக்கில் மொத்தம் 82 தொகுதிகள் உள்ளன. நாட்டில் உள்ள மாநிலங்களில் ஆகப்பெரிய சட்டமன்றம் சரவாக்கில் தான் உள்ளது.

இன்று காலை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதும் களத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள், தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். முன்பே அறிவித்திருந்தபடி காலை பத்து மணிக்கு வேட்புமனுத் தாக்கல் முடிவுக்கு வந்தது.

Pesaka Bumiputera Bersatu மற்றும் சரவாக் ஜிபிஎஸ் தலைவரான அபாங் ஜோஹாரி ஓபெங் கெடோங் தொகுதியில் மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக கடந்த 1981 முதல் அவர் சாதோக் தொகுதி உறுப்பினராக இருந்து வந்தார்.

சரவாக்கின் இரு துணை முதல்வர்களான டக்ளஸ் உக்கா எம்பாஸ் (Douglas Uggah Embas) மற்றும் அவாங் தெங்கா அலி ஹசன் (Awang Tengah Ali Hasan) ஆகிய இருவரும் புக்கிட் சாபான், புக்கிட் சாரி தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மேலும், சரவாக் ஐக்கிய மக்கள் முன்னணி Sarawak United People’s Party (SUPP) தலைவர் சிம் குய் ஹியான் (Sim Kui Hian), ஜனநாயக முன்னனேற்றக் கட்சி Progressive Democratic Party (PDP) தலைவர் தியோங் கிங் சிங் ஆகியோரும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset