நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பாஸ் கட்சி விரும்பாதது ஏன்?: துன் மகாதீர் விளக்கம்

கோலாலம்பூர்:

தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவு இன்னும் கட்சிக்கு இல்லை என்பதை உணர்ந்ததால், பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்க பாஸ் முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது இதனை கூறினார்.

கிழக்கு கடற்கரையில் உள்ள அவர்களின் பாரம்பரிய தொகுதிகளுக்கு வெளியே, புத்ராஜெயாவை கட்டுப்படுத்த போதுமான இடங்களை பாஸ் வெல்ல முடியாது என்பதை அக்கட்சி உணர்ந்தது.

பிரதமர் வேட்பாளரை மிக விரைவாக அறிவிப்பது, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடமிருந்து கட்சிக்கு அதிக ஆதரவைப் பெறுவதை கடினமாக்கும். 

பாஸ் கட்சிக்கு தாங்களாகவே பிரதமராக முடியாது என்பது தெரியும். 

நாடு முழுவதும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு அவர்களுக்குத் தேவை.

அவர்களிடம் உள்ள இடங்களின் எண்ணிக்கை ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைக்க போதுமானதாக இல்லை. 

எனவே அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதனால்தான் அவர்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset