நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூவார் மக்களுக்காக சைட் சாடிக் 1 மில்லியன் ரிங்கிட்டை திரட்டினார்

லங்காவி:

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சையத் அப்துல் ரஹ்மானின் கடின உழைப்பும் வியர்வையும் இறுதியாக பலனை தந்தது.

இதன் முலம் இரும்பு மனிதர் மலேசியா 2025 போட்டியின் வாயிலாக மூவார் மக்களுக்கான நலத்திட்ட பங்களிப்புகளாக 1 மில்லியன் ரிங்கிட் திரட்ட முடிந்தது.

முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சருமான அவர் மூன்று பிரிவு சவாலை 12 மணி நேரம் 22 நிமிடங்கள் 18 வினாடிகளில் முடித்தார்.

3.8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டம், 42.2 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவற்றை 12 மணி நேரம் 22 நிமிடங்கள் 18 வினாடிகளில் கடந்தார்.

மேலும்  ஊக்கத்தொகையைப் பெற உள்ளூர் ஃபேஷன் உற்பத்தியாளர் பிரைமா வேலட்  நிர்ணயித்த தேவைகளை அவர் பூர்த்தி செய்தார்.

சைட் சாடிக் நேற்று இரவு பெலாங்கி பீச் ரிசார்ட் அண்ட் ஸ்பாவில் இறுதி கோட்டைக் கடக்கும்போது அவரது பெற்றோர்களான ஷரிபா மஹானி, சையத் அப்துல் ரஹ்மான் அப்துல்லாஹ் ஆகியோரால் வரவேற்கப்பட்டபோது கண்ணீர் மல்கத் தோன்றினார்.

கடந்த ஆண்டு தனது முதல் பங்கேற்பில், அவர் 13 மணி நேரம் 13 நிமிடங்கள் நேரத்தைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset