நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலோக்கில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலேசியர் படுகாயம்

கோத்தாபாரு:

கோலோக்கில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலேசியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாய்லாந்தின் கோலோக்கில் உள்ள சுஹாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாய்லாந்து நேரப்படி மாலை 6.40 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், மலேசியர் சுடப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட 33 வயது நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.

இதில் சந்தேக நபர் பயன்படுத்திய 9மிமீ துப்பாக்கியையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு தப்பி ஓடிய சந்தேக நபரை போலிசார் தற்போது தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset