நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

23,766 காவல்துறையினர் மற்றும் குடும்பத்தார் கொரோனாவால் பாதிப்பு: துணை ஐஜிபி தகவல்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் இதுவரை காவல்துறை மற்றும் அவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த 23,766 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தகவலை காவல்துறை துணைத்தலைவர் ஐஜிபி டத்தோ ஸ்ரீ மஸ்லம் லஸிம் (Mazlan Lazim) தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 1,794 பேர் மூத்த அதிகாரிகள் என்றும், 10,577 பேர் கீழ்நிலை அதிகாரிகள் என்றும் அவர் கூறினார்.

மேலும், 1,137 பேர் பொது ஊழியர்கள் ஆவர். மீதமுள்ள 10,258 பேர் குடும்ப உறுப்பினர்கள் என்றார் துணை ஐஜிபி.

"தொற்றுப் பாதிப்பால் காவல்துறையில் 39 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 4 பேர் மூத்த அதிகாரிகள். 35 பேர் இளைய அதிகாரிகள் ஆவர். 188 குடும்ப உறுப்பினர்கள், பொது ஊழியர்களையும் கொரோனா கிருமி பலிவாங்கியுள்ளது," என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஸ்ரீ மஸ்லம் லஸிம் தெரிவித்தார்.

திரங்கானுவில் பருவமழை, வெள்ளப் பேரிடர்களை எதிர்கொள்ள 65 அதிகாரிகளும் 190 பேரும் கொண்ட 32 குழுக்கள் தயார் நிலையில்  இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset