நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஹஜ் யாத்திரை சென்னையிலும் தொடங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தவில்லை: இந்திய ஒன்றிய அரசு

புது டெல்லி:

ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்படும் விமான நிலையங்களில் சென்னையையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை ஏதும் வரவில்லை என்று மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 11ஆம் தேதி பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்திய அமைச்சரின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 21இல் இருந்து 10ஆக இந்திய அரசு குறைத்தது.

Netizens question Tamil Nadu CM MK Stalin for meeting vulgar,  hate-mongering Youtubers, influencers

இந்த விவகாரத்தை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது வியாழக்கிழமை எழுப்பிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, "ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்படும் விமான நிலையங்களில் இருந்து சென்னை நீக்கப்பட்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகள், தென் ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோர் கொச்சிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.

Kerala Assembly Election 2021: BJP's Mukhtar Abbas Naqvi In Kerala Says  Opposition Carries Secular Tag On Communal Bag

இதற்கு பதிலளித்த அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் செல்ல வேண்டும் என்றால் அந்நாடு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றியாக வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மனதில் வைத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

"சென்னை விமான நிலையத்தையும் ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் விமானநிலையங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து எங்கள் அமைச்சகத்துக்கு கோரிக்கை வரவில்லை. இதுதொடர்பாக மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசனிடம் இருந்து கோரிக்கை வந்தது. அதற்கு தகுந்த பதிலளிக்கப்பட்டு விட்டது' என்றார்.

ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் விமான நிலையங்களாக ஆமதாபாத், பெங்களூரு, குவாஹாட்டி, தில்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, லக்னௌ, மும்பை, ஸ்ரீநகர் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset