நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லிவர்பூல் அணியில் வாய்ப்புகளை வீணடிப்பதாக சாலா மீது குற்றச்சாட்டு

லண்டன்:

லிவர்பூல் அணியில் வாய்ப்புகளை வீணடித்து தற்காப்புக்கு உதவ முஹம்மத் சாலா தவறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

லிவர்பூல் அணியில் எகிப்தின் ராஜாவாக முஹம்மது சாலா விளங்கி வருகிறார்.

ஆனால் ஏமாற்றமளிக்கும் பருவத்தில் அவர் தனது கிரீடத்தின் ஒரு பகுதியை இழந்துள்ளார்

மேலும் அவரது பணி நெறிமுறை கேள்விக்குறியாகியுள்ளது.

சனிக்கிழமை லிவர்பூல் செல்சி அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அவ்வாட்டத்தில் சாலா தனது உண்மையான திறனுக்குக் கீழே இருந்தார்.

அப்போது அவர் பல வாய்ப்புகளை வீணடித்து தற்காப்புக்கு உதவத் தவறிவிட்டார்.

நடப்பு சாம்பியன்கள் தொடர்ச்சியான மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது.

இதனால் இந்த சீசனில் லிவர்பூலின் ஏழு பிரிமியர் லீக் ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் அவர் கோல் பட்டியலில் இடம் பெறவில்லை.

ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் ஏற்பட்ட தோல்வி, எட்டு நாட்களில் அர்சனல் அணியை முந்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset