நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இரு நாள்களில் ஜாவித் புயல் : தமிழ்நாட்டைத் தாக்குமா?

சென்னை:

தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அடுத்த மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜாவித் புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் டிசம்பர் 3 ஆம் தேதியில் இருந்து மழை அதிகரிக்கும்.

வடக்கு ஆந்திரா கடற்கரை தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் போது புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும். இந்த புயலுக்கு ஜாவித் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Very Severe' Cyclone Nivar Makes Landfall North of Puducherry as Tamil Nadu  Coast Pounded by Heavy Rain

ஜாவித் புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் டிசம்பர் 3 ம் தேதியில் இருந்து மழை அதிகரிக்கும்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியினால் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset