நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவில் 6 ஆண்டுகளில் 5 லட்சம் நிறுவனங்கள் மூடல்

புது டெல்லி:

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு மாநில வாரியாக மூடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய ஒன்றிய பெருநிறுவன துறைக்கான இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் அளித்துள்ள பதிலின் விவரம்:

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தற்போது வரை 5,00,506 நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே காலகட்டத்தில் 7,17,049 புதிய நிறுவனங்கள் 2013ஆம் ஆண்டைய நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Boost to domestic production; India Bans Import Of Air Conditioners -  NewsBharati

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1 முதலான காலகட்டத்தில் 22,557 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 1,09,098 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 6 ஆண்டுகளில் 2017-18ஆம் நிதியாண்டில் அதிக அளவாக 2,36,262 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2018-19இல் 1,43,233 நிறுவனங்கள் மூடப்பட்டன.

2016-17இல் 12,808 நிறுவனங்களும், 2019-20 இல் 70,972 நிறுவனங்களும் கடந்த நிதியாண்டில் 14,674 நிறுவனங்களும் மூடப்பட்டன என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset