செய்திகள் வணிகம்
கிரிப்டோகரன்சிக்கு தடை: மசோதா கொண்டுவரும் இந்திய அரசு
புதுடெல்லி:
தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்யும் சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியை உருவாக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா 2021 (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) என்ற மசோதாவும் அடக்கம்.
இந்த மசோதாவில் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளை தடை செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க கட்டமைப்பை ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 2009ம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமாக சென்றது. அப்போது நூறு ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஒரு பிட் காயின் (Bitcoin) மதிப்பு தற்போது 50 லட்சத்துக்கும் மேல்.
கிரிப்டோகரன்சியை வாங்குவதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒருபக்கம் உள்ளபோதும் இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் (Dark web) போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்தே கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய இந்திய அரசு முனைப்பு காட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
March 5, 2024, 5:17 pm
பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இந்தியா 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி
March 4, 2024, 11:29 am