நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் பாடாங் தேம்பாக் வேட்டை முனிஸ்வரர் ஆலயத்தின் கால்பந்து போட்டி: பில்மோர் அணி வாகை சூடியது

சுபாங்:

கம்போங் பாடாங் தேம்பாக் வேட்டை முனிஸ்வரர் ஆலயத்தின் கால்பந்து போட்டியில் பில்மோர் அணி முதல் நிலையில் வாகை சூடியது.

ஆலயத்தின் தலைவர் ரகுபதி இதனை கூறினார்.

இந்திய இளைஞர்களை கால்பந்து விளையாட்டில் ஊக்குவிப்பதுடன் ஒன்றுப்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.

முதல் முறையாக நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் நான்கு குழுக்கள் கலந்து கொண்டன.

பயிற்சியாளர் சரஸ் மேற்பார்வையில் இந்த கால்பந்து போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் முழு திறனை வெளிப்படுத்திய பில்மோர் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு 500 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை பிடித்த மைத்ரா அணியினருக்கு 300 ரிங்கிட் பரிசாக வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்தை ஆர்சி அணியும் நான்காவது இடத்தை அரா டாமன்சாரா அணியும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

முதலாம் ஆண்டாக இருந்தாலும் இப்போட்டிக்கு மகத்தான ஆதரவு கிடைத்தது.

இதனால் வரும் ஆண்டுகளில் இப்போட்டி இன்னும் சிறப்பான முறையில் நடத்தப்படும் என ரகுபதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset