
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கமம்: இந்திய பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளியை தேர்வு செய்ய வேண்டும்
ஈப்போ:
இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு கண்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்நிலைப்பாடு மேலும் தொடருமானால் காலப்போக்கில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக இங்குள்ள பேராக் சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் 1978 ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பி.சித்திரகலா கூறினார்.
நம் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்ட வேண்டும். அப்படி அனுப்ப தவறினால் காலப்போக்கில் மாணவர்கள் பற்றாக்குறையால் தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தை எதிர்நோக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் அடிப்படையில் கடந்த 1978 ஆம் ஆண்டில் இப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், போதித்த முன்னாள் ஆசிரியர்களை சிறப்பிக்கும் பொருட்டும், இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
இப்பள்ளி 90 ஆண்டு அகவையை நிறைவு செய்கிறது. இது 100 ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் இன்னமும் தமிழ்ப்பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன; செயல்படுகின்றன என்றால் அதற்கு முதன்மை காரணம் ம இ கா என்றால் மிகையாகாது.
ம இ கா தலைவர்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவி வருகின்றனர். ஆகையால், இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் இன்னமும் வேரூன்றி இருப்பதற்கு ம இ கா பெரும் பங்காற்றி வருவதாக இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகரான பேராக் மாநில ம இ கா தலைவரும், ம இ கா வின் தேசிய உதவித்தலைவருமான டான்ஸ்ரீ எம் இராமசாமி கூறினார்.
ம இ கா வின் முன்னாள் தலைவர்கள் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பேராதரவு வழங்கியதோடு மட்டுமன்றி பிள்ளைகளின் கற்றல் கற்பித்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர்.
இன்று தமிழ்ப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரும்பாலோர் உயர்நிலையில் இருந்து வருகின்றனர். அத்துடன், இந்நிகழ்வின் மலர் வெளியிடப்பட்டது. அதற்கு 5 ஆயிரம் ரிங்கிட். வழங்குவதாக அவர் பதிவிட்டார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில், இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான நடராஜா மற்றும் இந்தராணிக்கு தங்க மோதிரம் மற்றும் தங்க காப்பு அணிந்து சிறப்பிக்கப்பட்டனர்.
மேலும், இப்பள்ளியின் தலைமையாசிரியர் சுசிலா சேகர், பள்ளி வாரியத்தலைவர் டாக்டர் வ.ஜெயபாலன், டைரக்டர் பிரான்சிஸ் செல்வன், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 9:15 pm
மடானி அரசு மக்களின் புகார்களை கேட்பதுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது: பிரதமர்
July 20, 2025, 6:35 pm
புத்ரா ஹைட்ஸ் தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயம் அதிகாரப்பூர்வமாக மஹிமாவில் இணைந்துள்ளது
July 20, 2025, 5:43 pm
கடும் சவால்களுக்கு மத்தியில் தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவரானார்
July 20, 2025, 3:55 pm
சிலாங்கூர் அனைவருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது: அமிருடின் ஷாரி
July 20, 2025, 3:14 pm
தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் உதவி வழங்கினார் வ.சிவகுமார்
July 20, 2025, 2:36 pm
கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை மடானி அரசின் அடித்தளமாக உள்ளது: பிரதமர் அன்வார்
July 20, 2025, 1:29 pm