
செய்திகள் மலேசியா
கடும் சவால்களுக்கு மத்தியில் தங்க கணேசன் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவரானார்
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய இந்து சங்கத் தேர்தலில் தங்க கணேசன் அணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து தங்க கணேசன் மீண்டும் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசிய இந்து சங்கத்தின் 48ஆவது பேராளர் மாநாடு, தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 10 பேராளர்கள் பதவிக்கு இரு அணி சார்பில் 20 பேர் போட்டியிட்டனர்.
வெற்றி அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணிக்கு கணேஷ் பாபு தலைமை ஏற்றார்.
இந்நிலையில் இன்று காலையில் 2,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர்.
மாலை நான்கு மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நடப்பு தலைவர் தங்க கணேசன் 1,102 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
கோபி 1,091 வாக்குகள்,சுஜித்திரா 1,064 வாக்குகள், ஹரிதாசன் 1,064 வாக்குகள், சதீஷ் 1,041 வாக்குகள், ஏரா பெருமாள் 1,034 வாக்குகள் பெற்றனர்.
முனைவர் டாக்டர் முரளி 1,031 வாக்குகள், தினகரன் 1,031, கணேஷ் பாபு 1,028 வாக்குகள், டத்தோ மோகன் ஷான் 1,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி கூட்டணி அணி சார்பில் மொத்தம் 8 பேர் வெற்றி பெற்ற வேளையில் மாறுவோம் மாற்றுவோம் அணி சார்பில் கணேஷ் பாபு, டாக்டர் முரளிதரன் வெற்றி பெற்றனர்.
மொத்தம் 10 இடங்களில் 8 இடங்களில் தங்க கணேசன் அணியினர் வெற்றி பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து தங்க கணேசன் மீண்டும் இந்து சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்ன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 9:15 pm
மடானி அரசு மக்களின் புகார்களை கேட்பதுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்கிறது: பிரதமர்
July 20, 2025, 6:35 pm
புத்ரா ஹைட்ஸ் தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயம் அதிகாரப்பூர்வமாக மஹிமாவில் இணைந்துள்ளது
July 20, 2025, 3:55 pm
சிலாங்கூர் அனைவருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது: அமிருடின் ஷாரி
July 20, 2025, 3:14 pm
தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் உதவி வழங்கினார் வ.சிவகுமார்
July 20, 2025, 2:36 pm
கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை மடானி அரசின் அடித்தளமாக உள்ளது: பிரதமர் அன்வார்
July 20, 2025, 1:29 pm