நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் அனைவருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது: அமிருடின் ஷாரி

சுபாங் ஜெயா:

சிலாங்கூர் அரசாங்கம் அனைத்து மக்களும் வருமான ஈட்ட சமமான வாய்ப்புகளை வழங்க உறுதி பூண்டுள்ளது என்று அம்மாநில மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அரசியல் தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், மிகவும் வசதியான, வளமான வாழ்க்கைக்காக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்

மாநில அரசு பொருளாதாரச் செயல்திறனை மட்டும் பார்ப்பது மட்டுமல்லாமல், அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. 

இன வேறுபாடுகளின்றி அனைவரும் வருமானம் ஈட்ட சிலாகூர் அரசு பல சலுகைகளை வழங்கி வருவதையும் அமிருடின் ஒப்புக் கொண்டார். 

இன்று தி மைன்ஸில் 60 க்கும் மேற்பட்ட வர்த்தகர்களை ஒன்றிணைத்த ஸ்ரீ கெம்பங்கன் சட்டமன்ற பெண் வோங் சீவ் கி ஏற்பாடு செய்த பிளிங்-பிளிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அமிருடின் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset