நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் உதவி வழங்கினார் வ.சிவகுமார்

ஈப்போ: 

இங்குள்ள ஜெலப்பாங் தேவி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத் திருப்பணிக்கு 1 இலட்சம் ரிங்கிட் மானியம் வழங்கி உதவினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வ.சிவகுமார். அவரின் நிதியுதவிக்கு நன்றி கூறினார் ஆலயத்தலைவர் சா.தினகரன்.

தற்போது இந் நிதியுதவி வாயிலாக 80 சதவீத ஆலயத்திருப்பணி வேலைகள் முடிவடைந்துள்ளதாக அவர் சொன்னார். ஆலயத் திருப்பணிகள் முற்றுப்பெற்றவுடன் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலயத்திற்கு உதவி கேட்டு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரை அணுகியபோது, அவர் 1 இலட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக வாக்குறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு 2024 ல், 50 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியை ஆலயத்திற்கு வழங்கினார் என்று அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து  இவ்வாண்டில் மேலும் 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி வழங்கிய பத்துகாஜா நாடாளுமன்ற  உறுப்பினர் வ.சிவகுமாருக்கு ஆலய சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சா.தினகரன் கூறினார். 

ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset