நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை மடானி அரசின் அடித்தளமாக உள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

மடானி அரசு, அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சியை உணர்ந்து செயல்படுவதன் மூலமே நிலைத்திருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மேலும், ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது சொந்த கொள்கைகள், நிலைப்பாடுகள் இருந்தாலும் அவை யாவும் மடானி அரசின் கீழ் செயல்படுவதைப் பாதிக்கவில்லை என்று பிரதமர் அன்வார் சுட்டிக் காட்டினார். 

அனைத்துக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு உறுதுணையாகச் செயல்படுவதைப் பிரதமர் அன்வார் ஒப்புக் கொண்டார், 

மடானி அரசுடன் இணைந்து செயல்படுவதற்காக தேசிய முன்னணி தலைவர், டத்தோஶ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி, ஜிபிஎஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஃபடில்லா யூசுப் உட்பட மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். 

Kampung Pachitan-இல் இன்று நடைபெற்ற Ukhuwah MADANI நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அன்வார் இவ்வாறு கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset