நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் எல்ஜிபிடிகியூ சட்டவிரோதமானது என்பதை பிரதமர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: அஃப்னான் ஹமிமி

கோத்தாபாரு:

மலேசியாவில் எல்ஜிபிடிகியூ சட்டவிரோதமானது என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

பாஸ் இளைஞர் அமைப்பு தலைவர் அஃப்னான் ஹமிமி டத்தோ தைப் அசமுடின் இதனை  கூறினார்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கை, பாலியல் அடையாளத்தை கேள்விக்குட்படுத்துதல் (LGBTQ) தவறானதாகும்.

ஆக இந்த  நடைமுறைகள் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை பிரதமர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

மனித உரிமைகள் சுதந்திரம் என்ற பெயரில் அரசாங்கம் எல்ஜிபிடிகியூ குழுக்களுக்கு முழு இடத்தை வழங்குவதால் அவர்கள் மிகவும் தைரியமாகி வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் எல்ஜிபிடிகியூ பிரச்சினையை தீர்ப்பதில் தீவிரமாக இருந்தால்,

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எல்ஜிபிடிகியூ ஹராம் என்று அறிவிக்குமாறு பிரதமரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் குழுவிற்கு இந்த மனநிலையை வளர்ப்பதற்கு அதிகளவில் இடம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது,

மேலும் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

கிளந்தான் பாஸ் இளைஞர் மாநாட்டை திறந்து வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset